Categories: Cinema News latest news

இத்தனை நாளா விஜய் சேதுபதி அங்கேயா இருந்தாரு? என்ன ஒரு டெடிகேஷன்!

Vijaysethupathi: விஜய் சேதுபதி புதியதாக நடிக்கும் ஒரு படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்கெட் கொஞ்சம் உயர்ந்ததாகவே தெரிகிறது. ஏற்கனவே ஆறுமுக குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடைசியாக அவர் நடித்த மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்தப் படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: பிரேம்ஜி பார்க்க வரதே இல்லை… கல்யாணத்துக்கு பின் எல்லாம் மாறிச்சு… அண்ணனா ஃபீலிங்கா?

அந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுதான் துவங்கியுள்ளது. அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யா மேனனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே 19 1 ஏ என்ற ஒரு மலையாள படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர்.

ஆனால் அந்த படத்தில் இருவருக்கும் ஆன காட்சிகள் மிகக் குறைவுதான். அதன்பிறகு மீண்டும் அவர்கள் இணைந்து  இந்த ஒரு புதிய படத்தில் இணைய இருக்கின்றனர். அது ஒரு வித்தியாசமான ஜானரில் ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்டில் அமைந்த படமாக இருப்பதாக ஒரு விழாவில் நித்தியா மேனன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பிரேம்ஜி பார்க்க வரதே இல்லை… கல்யாணத்துக்கு பின் எல்லாம் மாறிச்சு… அண்ணனா ஃபீலிங்கா?

அந்தப் படத்தில் அவர் நடிப்பதை மிகவும் எக்சைட்டாக ஃபீல் பண்ணுவதாகவும் ஒரு தனித்துவமான கேரக்டர் என்றும் வழக்கமாக அவர் நடிக்கும் ஜானரை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது என்றும் புகழ்ந்து பேசினார் நித்தியா மேனன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக நடிக்க இருக்கிறாராம். அதனால் கடந்த 20 நாட்களாக பரோட்டா எப்படி போடுவது என்பதை கற்றுக்கொண்டு யுனிட் ஆள்கள் அத்தனை பேருக்கும் பரோட்டா போட்டுக் கொடுத்தாராம் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: வேட்டையனுக்கு முன்பே விடாமுயற்சி வருமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini