Categories: Cinema News latest news

பிக்பாஸ் சீசன் 8 ல் களமிறங்கும் பிரபல நடிகர்! இனி அண்ணனோட ஆட்டத்தை பார்ப்போம்

Biggboss Season 8: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார்.அதனாலேயே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. ஏழு சீசன்களையும் வெற்றி சீசன்களாக ஆக்கிய கமல் இனி வர போகும் எட்டாவது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதை பற்றி பல செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது. ஒரு பக்கம் அரசியல், இன்னொரு பக்கம் சினிமா என படு பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் கமலுக்கு இனி வரும் காலங்களில் ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் இனி பிக்பாஸ் சீசன் 8 ஐ தொடர முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தனுஷுக்கு சிம்பு எவ்வளவோ மேல்!.. இப்படியெல்லாம் அவர் பண்ணது இல்ல!.. விஷயம் இதுதான்!..

ஆனால் இவர் அறிக்கை விடுவதற்கு முன் விஜய் டிவி நிறுவனம் எட்டாவது சீசனை கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என பல அக்ரிமெண்ட் போட்டு அதற்கான விளம்பரமும் செய்து விட்டது. இப்போது கமல் எடுத்திருக்கும் திடீர் முடிவால் விஜய் டிவிக்குத்தான் பெரிய நஷ்டம் என்றும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் இதுவரை கொடுத்த சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுக்கிறோம் என்று சொன்னாலும் கமலால் இந்த நிகழ்ச்சியை தொடர முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் கமலுக்கு அடுத்த படியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.

இதையும் படிங்க: அவதார் 3 பட தலைப்பே தாறுமாறே இருக்கே!.. ரிலீஸ் தேதியையும் சொல்லிட்டாரே ஜேம்ஸ் கேமரூன்!..

இதற்கு முன் கொரானா காலத்தில் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள். ஆனால் சிம்புவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் சரத்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

vjsethu

ஆனால் விஜய் டிவி மூன்று நடிகர்களிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சூர்யா, சிம்பு மற்றும் விஜய் சேதுபதி. கடைசியில் விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!

அதற்கான அக்ரிமெண்டும் கையெழுத்தாகிவிட்டதாம். இன்னும் 10 நாள்களில் அதற்கான ப்ரோமோ வீடியோவும் தயாராக போவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில்தான் ஒரு ஹீரோவாக மகாராஜா படத்தின் மூலம் ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்த விஜய் சேதுபதி அதே கெத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini