Categories: Cinema News latest news throwback stories

படத்துக்காக எடையை குறைச்சதால் வந்த விளைவு!.. விக்ரம் சந்திச்ச பிரச்சனை என்னன்னு தெரியுமா?..

தமிழ் சினிமா நடிகர்களில் உலகநாயகன் கமலுக்கு அடுத்தபடியாக கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றுவது விக்ரம் தான். படத்திற்காக தனது உடலை வருத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.

ஐ படத்திற்காக 50 கிலோ வரை எடையைக் குறைத்தார். தனது முழு உடல் அமைப்பையும் மாற்றி 4 விதமான தோற்றங்களில் படத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். இந்தப் படத்தை சுமார் 3 ஆண்டுகாலம் எடுத்தார் டைரக்டர் ஷங்கர். ஆனால் படம் நல்லா வரவேண்டும் என்று எடுத்த அனைவரது முயற்சிகளும் வீண்போகவில்லை.

இந்தப் படத்திற்காக ரொம்பவே எடையைக் குறைத்ததால் விக்ரம் ஒரு கட்டத்தில் காது கேளாத நிலையைக் கூட அடைந்தார். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை உணர்ந்து அதை சரிசெய்து கொண்டார். அதே போல் மேக் அப்பிற்காக மணிக்கணக்கில் உட்கார்ந்து இருந்தார்.

Vikram3

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அர்னால்டு சுவாசநேகர் பங்கு பெற்றார். விக்ரமின் திறமையைக் கண்டு வியந்து பாராட்டினார்.

படமும் வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்றது. ஆனாலும் படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்கவில்லை. விமர்சகர்களின் கவனத்தையும் பெரிதாகப் பெறவில்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த விக்ரமுக்கு இந்தப் படம் உரிய அங்கீகாரத்தைப் பெறாமல் போனது வருத்தமான விஷயம் தான். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத விக்ரம் தொடர்ந்து தன் வேலைகளைக் கச்சிதமாக செய்து படத்தில் நடித்துக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

2022ல் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து உலக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்காக உடலை வருத்தி நடித்து வருகிறார் விக்ரம். இவர் போல நடிகர்கள் இருப்பதால் தான் தமிழ் சினிமா இன்னும் உலகத்தரத்திற்கு உயர்ந்து நிற்கிறது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v