Connect with us

Cinema News

17 வருஷத்துக்கு முன்பு சூரி எழுதுன லவ் லெட்டர்..- சூரியை மிரள வைத்த விமல்!..

நடிகர் சூரியும், விமலும் வெகு காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். 2010 இல் இயக்குனர் சற்குணம் இயக்கி வெளியான களவாணி திரைப்படம் இவர்கள் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக இருந்தது என கூறலாம். இருவருக்குமே சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்க இந்த படங்கள் உதவின.

தொடர்ந்து சுமார் படங்களாக நடித்து வந்த நடிகர் விமலுக்கு போன வருடம் வெளியான விலங்கு வெப் சீரிஸ் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

soorie
soorie

அதே போல நடிகர் சூரிக்கும் விடுதலை திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. தொடர்ந்து சூரி ஒரு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருவதற்கு ஆரம்ப புள்ளியாக விடுதலை திரைப்படம் இருக்கும் என நம்பப்படுகிறது.

விமல் செய்த காரியம்:

விடுதலை படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரிடமும் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது விமல் கையில் ஒரு கடிதத்துடன் வந்தார். இது 17 வருடங்களுக்கு முன்பு சூரி தனது காதலிக்கு எழுதிய கடிதம். இப்போது நான்கு நாள் முன்னாடி வீட்டை சுத்தம் செய்தபோது எனக்கு கிடைத்தது என கூறி விமல் கொடுத்தார்.

அதை பார்த்த சூரி அதிர்ச்சியாகிவிட்டார். இப்பதான் வாழ்க்கைல மேல வரோம்னு இருந்தேன். இவர் என்ன மறுபடியும் கீழ கொண்டு போயிடுவார் போல என சூரி அதிர்ச்சியாக கூற இறுதியில் அது சூரியை ப்ராங் செய்வதற்காக விமல் செய்த வேலை என்பது பின்னால் தெரிந்தது.

Continue Reading

More in Cinema News

To Top