தமிழ் சினிமாவில் நல்ல சார்மிங்கா ப்ளே பாயாக ரசிகர்களை குறிப்பாக பெண்களை கவர்ந்தவர் நடிகர் வினய். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். திடீரென ஒரு பிரேக் எடுத்து மீண்டும் ஒரு பலம் வாய்ந்த வில்லன் நடிகராக நடிகர் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் மிரட்டியிருப்பார். அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் வில்லன் ரோலில் அசால்டாக நடித்திருப்பார்.இந்த நிலையில் நடிகர் வினயின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் ஃபிளைட் ஓட்டி சென்று கொண்டிருக்கிறார். இது அவருடைய பல நாள் கனவாம்.
இந்த கனவு இப்பொழுது நிறைவடைந்திருக்கிறது என தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த வீடியோவையும் போட்டு பதிவிட்டுள்ளார். மேலும் அவர் நீண்ட நாள்களாக காதலித்து வரும் நடிகை விமலா ராமன் அந்த பதிவை பார்த்து உன்னுடைய கனவு பலித்துவிட்டது. வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
கூடிய சீக்கிரம் இவர்களது திருமணம் அரங்கேறும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரசிகர்களும் அந்த வீடியோவை பார்த்து உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோ உங்களுக்காக : https://www.instagram.com/tv/CdGYqispg_3/?utm_source=ig_web_copy_link
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…