×

நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி...!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படும் விஷால், நடிப்பை தவிர்த்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கள் ஆகிய விஷயங்களில் பிஸியாக இருப்பவர். இதனால் அவர் பல சிக்கலிலும் சர்ச்சைகளிலும் சிக்கி பேசப்படுவார்.

 

இந்நிலையில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் விஷால் குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த  20 நாட்களுக்கு முன் நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருவரும் தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த செய்தியை எந்த ஒரு மீடியாவும் வெளியிடவில்லை. இவ்வளவு பெரிய நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை ஏன் வெளியில் சொல்லவில்லை என ஆளாளுக்கு பேசி வருகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் குணமடைந்து ரிசல்ட் நெகட்டிவ் என வந்திருப்பதாக செய்திகள் கூறியது. குணமான பின்னரே செய்திகள் வெளியாகியிருப்பது. ஏன்...? எதற்கு இப்படி என பலரையும் மண்டை பிழிக்க வைத்துள்ளது.  

From around the web

Trending Videos

Tamilnadu News