×

மீண்டும் கலத்தில் குதிக்கும் விஷால்... இந்த முறை என்னவெல்லாம் நடக்கபோகுதோ!

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த போது முன்னாள் சங்கத்தினரான ராதா ரவி, சரத்குமார் அணிக்கு இடையே பல பிரச்சனைகள் எழுந்தன.

 

அதன் பின் ஏகப்பட்ட பிரச்சனைகள் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தன. விஷாலின் அணியில் இருந்தவர்கள் சுவாமி சங்கரதாஸ் அணி என விஷாலுக்கு எதிராக தனி அணியாக கிளம்பினர். தேர்தல் நடத்துவதிலும் பல பிரச்சனைகளாகி அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இதற்கிடையில் அவர் கடந்த முறை நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட மனு கொடுத்து கடைசி நேரத்தில் அது நிராகரிக்கப்பட்டதால் அவரால் போட்டியிட முடியாமல் போனது.

இந்நிலையில் விஷால் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் சுற்றி வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News