×

ஒரே நேரத்தில் 2 நடிகை மீது லவ்வு...கல்யாணத்துக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட விஷால்.... 

 
vishal

கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே நடிகர், நடிகைகளின் காதல் கதை என்பது ரசிகர்கள் அறிந்துகொள்ள விரும்பும், அல்லது பேச விரும்பும் சுவாரஸ்யமான ஒன்றாகத்தான் இருக்கிறது. பல நடிகர்கள் ஒரே பெண்ணை (அவர் நடிகையாகவும் இருக்கலாம்) காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளனர். ஜெமினி கணேசன் போல் பல திருமணங்களும் செய்து கொண்டு, பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடிகர்களும் உண்டு.

vishal

இன்று விஷாலின் காதல் கதை துவங்கி அவரின் திருமணம் நின்றது வரை நடந்த சம்பவங்களை பற்றி பார்ப்போம்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெலுங்கில் சில படங்களை தயாரித்தவர். தமிழிலும் படங்களை தயாரித்து வந்தார். ஒரு தயாரிப்பாளர் மகனாக இருந்தாலும் இயக்கத்தில் ஆர்வம் உள்ளவர் விஷால். எனவே, நடிகர் அர்ஜூனிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திடீரென நடிப்பு ஆசை ஏற்பட்டு ‘செல்லமே’ படம் மூலம் நடிகர் ஆனார்.

vishal

அவர் நடித்த திமிரு, சண்டக்கோழி ஆகிய படங்கள் வசூலை வாரிக்குவித்ததும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். திடீரென ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு நடிகையை காதலிக்கிறேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அது யார் என கடைசி வரை அவர் கூறவில்லை. நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், அவரின் சிறுவயது முதலே நண்பர்கள். அதன்பின் அது காதலாக மாறியது. விஷால் அவரைத்தான் சொல்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்த காதல் சில வருடங்கள் தொடர்ந்தது.

vishal

அப்போதுதான் தமிழ் சினிமாவில் லட்சுமி மேனன் வளர்ந்து வந்தார். விஷாலுடன் ‘பாண்டியநாடு’ படத்தில் நடித்தார். அப்போதே இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உண்டானது. அதன்பின் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன் நடிகர்களுடன் மிகவும் நெருக்கமாக நடிக்கமாட்டார். விலகி நின்றே காதல் காட்சியில் நடிப்பார். ஆனால். ‘ நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு லிப் கிஸ் எல்லாம் கொடுத்து மிகவும் நெருக்கமாக நடித்தார்.

vishal

அப்போதே இருவரும் காதல் பற்றிக்கொண்டது. இதைபுரிந்த கொண்டு வரலட்சுமி, விஷாலுடனான காதலை பிரேக்கப் செய்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘லட்சுமிகரமான ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வேன்’ என மீண்டும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஷால். ஆனால், லட்சுமி மேனன் வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே, அந்த காதலும் டிராப் ஆனது.

vishal

அதன்பின் 2019ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்கிற பெண்ணுடன் திருமணம் என அறிவித்தார் விஷால். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், அது திருமணம் வரை செல்லவில்லை. விஷாலின் காதல் லீலைகள் அனைத்தையும் கேள்விப்பட்ட பின்னரே அவருடனான திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் அனிஷா. தற்போது வரை விஷாலுக்கு திருமணம் நடைபெறவில்லை. 

vishal5

அடுத்து மீண்டும் ஒரு நடிகையை காதலிப்பாரா இல்லை வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!..
 

From around the web

Trending Videos

Tamilnadu News