×

நம்பி கதையை சொன்னா இப்படி செய்யலாமா விஷால்? - கதறும் அசோசியேட் இயக்குனர்

 
நம்பி கதையை சொன்னா இப்படி செய்யலாமா விஷால்? - கதறும் அசோசியேட் இயக்குனர்

சக்ரா படத்தில் விஷால் நடித்துக்கொண்டிருந்த போது அப்படத்தின் அசோசியேட் இயக்குனர் விஜய் என்பவர் விஷாலிடம் ‘காமன் மேன்’ என்கிற தலைப்பில் ஒரு கதையை கூறினாராம். கதை விஷாலுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலுவிடம் சென்று கதையை கூறுமாறு விஷால் கூறியுள்ளார். அந்த உதவி இயக்குனரும் அங்கு சென்று கதையை கூறி ஓகே செய்துள்ளார். 

ஆனால், எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் கே.பி.பிலிம்ஸ் பாலு இறந்து விட இந்த விவகாரம் தேங்கிப்போனது. கே.பி.பிலிம்ஸ் பாலுவிடம் ஏறக்குறைய தனது முழு சம்பளத்தையும் ஏற்கனவே அட்வான்ஸ் என்கிற பெயரில் விஷால் வாங்கிவிட்டார். எனவே தனது அடுத்த படம் அவரின் பேனருக்குதான் என விஷாலும் அறிவித்தார்.

ஆனால், திடீர் திருப்பமாக புதிய படத்தை விஷால் அறிவித்துள்ளார். விஷாலே தயாரிக்கும் அப்படம் தொடர்பான ஒரு வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் விஷால் வெளியிட்டுள்ளார்.  மேலும் #NotACommonMan என்கிற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த உதவி இயக்குனர் விஜய் தனது காமன் மேன் கதையைத்தான் விஷால் வேறு இயக்குனரை வைத்து எடுக்கிறாரோ என்கிற அதிர்ச்சியில் ஆழந்துள்ளாராம். ஆனால், இந்த கதை வேறு என அவரிடம் விஷால் கூறி சமாதானம் செய்துள்ளாராம்

அநேகமாக இந்த விவகாரம் விரைவில் ஒரு பஞ்சாயத்தை ஏற்படுத்தும் எனவும், விரைவில் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜிடம் இந்த பஞ்சாயத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹீரோவை நம்பித்தான் ஒரு உதவி இயக்குனர் கதை சொல்கிறார்.. ஆனால், அந்த கதையை திருடி வேறு இயக்குனர் வைத்து எடுப்பதில் கொஞ்சம் நியாயம் இல்லை.

இப்படி செய்யலாமா விஷால்?... 

From around the web

Trending Videos

Tamilnadu News