×

நடிகர் விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்... ஆச்சர்ய தகவல்....

 
நடிகர் விவேக்கிற்கு 4 பெண் குழந்தைகள்... ஆச்சர்ய தகவல்....

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அவருக்கு எத்தனை குழந்தைகள் என்பது பலருக்கும் தெரியவில்லை. அவரின் மகன் மூளை காய்ச்சலில் இறந்து போனது பலருக்கும் தெரியும். அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக பலரும் கருதுகின்றனர். உண்மையில் அவருக்கு 2 மகள்கள் ஒரு மகன். மூத்தவர் பெயர் அமிர்தா நந்தினி. இளைய மகள் தேஜஸ்வனி. மூன்றாவதாக பிறந்தவர்தான் மகன் பிரசன்னகுமார். 2015ம் ஆண்டு 13 வயதில் மூளை காய்ச்சலால் அவர் மரணமடைந்தார்.

மகன் இழந்த துக்கம் தாங்காமல் மகனின் பெயரில் ஒரு குழந்தைகள் டிரெஸ்ட் ஒன்றையும் விவேக் நடத்தி வந்தார்.  தனக்கு ஒரு மகன் வேண்டும் என ஆசைப்பட்ட விவேக் ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை எடுத்தார். அதையடுத்து அவரின் மனைவி கருவுற்றார். தனது மகனே மீண்டும் வந்து பிறப்பான் என விவேக் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. ஆனாலும், மகிழ்ச்சியுடன் அவர்களை வளர்த்து வந்தார் விவேக்.

இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News