Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகர் விவேக் கவலைக்கிடம் – மருத்துவமனை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்….

நடிகர் விவேக் கவலைக்கிடம் – மருத்துவமனை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்….

922126d8f7b1b6e1ee2d2818ae3459d8

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக். ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர். ஏனெனில், நகைச்சுவை மட்டுமின்றி சமூக அவலங்களை தனது நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 11 மணியளவில் அவர் சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். 

எனவே, அவரது இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சை செய்யப்பட்டது.  மேலும், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது. விவேக் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் , இன்னும் 24 மணி நேரங்கள் கழித்தே அவர் உடல்நிலை பற்றி கூற முடியும் எனவும், எக்மோ உதவியுடன் உள்ள விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளது எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.  அதோடு, நடிகர் விவேக்கின் உடல்நலக்குறைவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top