×

டெலிபோன் ஆப்பரேட்டராக விவேக்! -  வைரலாகும் புதிய புகைப்படம்...   

 
டெலிபோன் ஆப்பரேட்டராக விவேக்! - வைரலாகும் புதிய புகைப்படம்...

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், 1982ம் ஆண்டின் போது அரசு பணியில் சேர்வதற்காக டெலிபோன் ஆப்பரேட்டர் பயிற்சியில் மதுரையில் விவேக் பயிற்சி பெற்றார். அப்போது, தன்னுடன் பயிற்சி எடுத்துக்கொண்டவர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த பயிற்சிக்கு பின் மதுரையில் 3 வருடம் பணிபுரிந்த விவேக் சென்னைக்கு வந்து தலைமை செயலகத்தில் பணிபுரிந்தார். அதன்பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தில் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.
 

vivek

From around the web

Trending Videos

Tamilnadu News