×

விஜய் ஆண்டனி ஹீரோ.. விவேக் வில்லன்... அட இது நடக்காம போச்சே!

 
விஜய் ஆண்டனி ஹீரோ.. விவேக் வில்லன்... அட இது நடக்காம போச்சே!

காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் மரணம் தமிழ் தமிழ் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவேக்கை பலருக்கும் நகைச்சுவை நடிகராகவும், மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலராக மட்டுமே தெரியும். ஆனால், அவர் இயக்குனராக விரும்பித்தான் சினிமாவுக்கு வந்தார். ஆனால், பாலச்சந்தர் அவரை நடிகராக மாற்றிவிட்டார்.

ஆனாலும், ஒரு திரைப்படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என்கிற ஆசை விவேக்கிற்கு பல வருடங்களாகவே இருந்து வந்தது. ஒரு கதையை தயார் செய்து அதில் நடிக்க நடிகர் மாதவனின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார். அதேபோல், சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜெண்ட் சரவணாவிடம் அந்த கதையை கூற, அவரே தயாரிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. அதன்பின் மாதவனும் பிஸியாகிவிட விஜய் ஆண்டனியிடம் அந்த கதையை கூறி சம்மதம் பெற்றுள்ளார். அதேபோல், பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் அந்த கதையை கூற அவரும் தயாரிக்க முன்வந்தாராம்.. இதில், முக்கிய விஷயம் என்னவெனில் இப்படத்தில்  விவேக்கே வில்லனாக நடிக்க விருந்தாராம்.

ஆனால், அதற்குள்தான் மரணம் அவரை தழுவிக்கொண்டது. விவேக்கின் இயக்கத்தையை ரசிகர்களாலும் பார்க்க முடியாமல் போய்விட்டது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News