சாரே இது கொல மாஸ்!.. ரஜினி ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த விவேக்.. வீடியோ பாருங்க...

திரைத்துறையில் சாதனை படைத்தவருக்கு மத்திய அரசு வழங்கும் சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 51வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.இதற்கு முன்பு தமிழில் நடிகர் சிவாஜி மற்றும் இயக்குனர் பாலச்சந்தர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். இந்த செய்தி தமிழ் திரைப்பட உலகினருக்கும், ரஜினியின் ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினிக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் நண்பரும் , நடிகருமான விவேன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாட்டர் பாட்டிலை சுழற்றிப்போட்டு ரஜினியின் ஸ்டைலிலேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Dear style lovers!! My style of wishing @rajinikanth the superstar on bagging the #DadasahebPhalkeAward 👏🏻 pic.twitter.com/3vJMPh1K7r
— Vivekh actor (@Actor_Vivek) April 1, 2021