3 ஆயிரம் கோடி வசூலை பெற்ற முதல் கன்னட நடிகர் யஷ்!.. ராக்கி பாய் கலக்குறாரே!...
ஏற்கனவே சில கன்னட படங்களில் நடித்திருந்தாலும் பிரசாந்த்ந் நீல் இயக்கத்தில் நடித்து வெளியான கே.ஜி.எப் திரைப்படம் நடிகர் யஷ்ஷை ஒரு பேன் இண்டியா நடிகராக மாற்றியது. அதாவது தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தியிலும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
அதன்பின் வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. அடுத்து வெளியான டாக்ஸிக் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியான ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது..
கே.ஜி.எப் ரூ.250 கோடி, கே.ஜி.எப் 2 ரூ.1250 கோடி, டாக்ஸிக் ரூ.342 கோடி, ராமாயணா திரைப்படம் ரூ.1481 கோடி என நான்கு படங்களின் மூலம் பேச உலக அளவில் ரூ.3000 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்ற நடிகராக யஷ் சாதனை படைத்துள்ளார். கன்னட படத்தில் நடிக்க தொடங்கி குறுகிய காலத்திலேயே இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவிலும் கவனம் பெற்ற நட்சத்திரமாக யஷ் மாறியிருக்கிறார்.
