×

அந்த மனுசன் அவ்ளோ நல்லவர்ப்பா! சம்பளம் வாங்காமல் நடித்த யோகிபாபு...

 
அந்த மனுசன் அவ்ளோ நல்லவர்ப்பா! சம்பளம் வாங்காமல் நடித்த யோகிபாபு...

தமிழ் சினிமாவில் காமெடிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நேரத்தில் வந்தவர்தான் யோகிபாபு. கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பின் அவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற ரேஞ்சுக்கு தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மண்டேலா திரைப்படம் திரைப்பட விமர்சகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அதிக திரைப்படங்களில் நடிப்பதால் யோகிபாபுவின் சம்பளம் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சமாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், ஒரு புதிய திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் யோகிபாபு நடித்துள்ளார். நடன இயக்குனர் தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘நாயே பேயே’. காமெடி ஹாரர் வகையை சேர்ந்த இப்படத்தில் நடிக்க யோகிபாபுவை படக்குழு அனுகியுள்ளது. ஆனால், அவர்கள் கேட்ட கால்ஷீட்டை கொடுக்க முடியாமல் கை விரித்துவிட்டாராம் யோகிபாபு. ஆனாலும், இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் எனக்கூறிய அவர் ஒரு பாடல் காட்சியில் நடித்து கொடுத்தாராம். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் அதற்கு அவர் சம்பளமே வாங்கவில்லை என்பதுதான்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News