Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

யோகிபாபுவுக்கு இப்படி ஒரு தங்க மனசா? – ஹீரோஸ்லாம் ஃபாலோ பண்ணுங்கப்பா…

யோகிபாபுவுக்கு இப்படி ஒரு தங்க மனசா? – ஹீரோஸ்லாம் ஃபாலோ பண்ணுங்கப்பா…

58bc2e51c1a2c896b747e82aab432129-2

தமிழ் சினிமாவில் கவுண்டணி செந்தில், விவேக், வடிவேலு தொடர்ந்து தற்போது அதிக படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகராக யோகிபாபு மாறியுள்ளார். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் அவர் சம்பளமாக பெறும் அளவுக்கு அவரின் மார்கெட் ஏற்றத்தில் இருக்கிறது. சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனா லாக் டவுனால் மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். அதன்பின் வெளியான பல திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே,தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

99fc16338e67f23e2a8198189550da6d

இதனை புரிந்து கொண்ட யோகிபாபு தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் ‘இந்த கஷ்டமான சூழ்நிலையில், நீங்கள் படம் தயாரிப்பதே பெரிது. எனவே, எனக்கென்று நீங்களே ஒரு சம்பளத்தை கணித்து கொடுத்து விடுங்கள்’ எனக்கூற துவங்கியுள்ளாராம். இது அவரை வைத்து படம் எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.

லாக்டவுனில் வீட்டில் இருந்ததை காரணம் காட்டி சம்பளத்தை சேர்த்து கேட்டு வாங்கி வரும் நடிகர், நடிகையர் யோகிபாபுவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்..
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top