தமிழ் சினிமாவில் பல காலங்கள் இருந்தும் கூட மக்கள் மத்தியில் தடம் தெரியாமல் போன நடிகர்கள் பலர் இருக்கின்றனர். நம் கண் முன்னால் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பே காரணமாக உள்ளது.
ஒருவேளை இந்த நடிகர்களுக்கு எல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தால் அவர்களுக்கு வாய்ப்புகளுமே குறைந்துவிடும். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிக்கும் படங்களில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் யுகேந்திரன்.
Vijay
இவர் மலேசியா வாசுதேவனின் மகனாவார். முதன் முதலாக பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு யூத், பகவதி, திருப்பாச்சி என வரிசையாக விஜய்யுடன் பல படங்களில் நடித்தார். இதனால் விஜய்க்கும் இவருக்குமிடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
அதிலும் யூத் திரைப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் யுகேந்திரன். ஆனால் கடந்த 8 வருடங்களாக அவருக்கு தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இடையில் ஒரு பேட்டியில் அவர் இதுக்குறித்து கூறும்போது சிங்கப்பூரில் ஒரு டிவி நிறுவனத்தில் நாடகங்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த 8 வருடங்களாக அதில் ஈடுப்பாட்டோடு இருந்த காரணத்தால் சினிமாவில் ஆர்வம் செலுத்த முடியவில்லை.
மேலும் சில சமயங்களில் நடிகர் விஜய்க்கு போன் செய்வேன். ஆனால் அவர் எடுக்கவே மாட்டார். விஜய் இப்போது பெரும் உச்சத்திற்கு சென்றுவிட்டார். அதனால் என்னுடைய போனை அவர் எடுப்பது கடினம் என பேசியிருந்தார் யுகேந்திரன்.
இதையும் படிங்க: ஏமாற்றி பணம் வாங்கிய பெண்மணி – என்.எஸ்.கே என்ன செய்தார் தெரியுமா?..
Kantara 2:…
விடுதலை 2…
Parasakthi: அமரன்…
STR49: வெற்றிமாறன்…
ஆதிக் ரவிச்சந்திரன்…