Connect with us
dhoni_new

Cinema News

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த தோனி… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…!

கிரிக்கெட் என்றாலே நம் அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது கேப்டன் தோனி தான். இவர் இல்லாமல் கிரிக்கெட்டை நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் இவரின் அர்ப்பணிப்பு அளவற்றது. மேலும் இவரை ரசிகர்கள் அனைவரும் சூப்பர் கூல் கேப்டன் என்று தான் அழைப்பார்கள்.

ஏனெனில் அந்த அளவிற்கு பொறுமையாக பிரச்சனைகளை கையாள்வதில் தோனி கைதேர்ந்தவர். சரி நாம் விஷயத்திற்கு வருவோம் இதுநாள் வரை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே தோனியை பார்த்த நாம் இனி அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்க போகிறோம்.

dhoni1

ஆமாங்க இதுவரை விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த கிரிக்கெட் வீரர் தோனி தற்போது முதன் முறையாக அதர்வா தி ஆரிஜின் என்ற கிராபிக்ஸ் நாவல் ஒன்றிற்கு சூப்பர் ஹீரோ மாடலாக தோனி நடித்துள்ளார். இந்த கிராபிக்ஸ் நாவல் அமேசான் பிரைம் மூலம் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

தோனியின் முதல் பேண்டஸி பிக்சனான இந்த நாவலின் கதையை ரமேஷ் தமிழ் மணி எழுதியுள்ளார். இதற்காக, 150க்கும் மேற்பட்ட வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தோனி கூறியிருப்பதாவது, “இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

dhoni2

இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன்” என கூறியுள்ளார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top