வெள்ளித்திரை நடிகர்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்களோ அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் பந்தம், உறவுகள், பொம்மலாட்டம் என பல சீரியல்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் சமீபத்தில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீகுமார் தீ விபத்து ஒன்றில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சென்னை பாண்டிபஜாரில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தனது குடும்பத்துடன் ஷாப்பிங் சென்ற நடிகர் ஸ்ரீகுமார் அந்த தீ விபத்தில் சிக்கி கொண்டாராம். அவர்கள் மட்டுமின்றி சுமார் 70 பேர் அந்த தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்துவிட்டு நடிகர் ஸ்ரீகுமார் உட்பட அனைத்து மக்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தீ விபத்து குறித்து பேசிய நடிகர் ஸ்ரீகுமார், “இது எனக்கு இரண்டாவது வாழ்க்கை தான். இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்த பிறகுதான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. தீவிபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் உண்டாகவில்லை. ஆனால் புகையால் கண் எரிச்சல் உண்டானது” என தெரிவித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…