மனதில் ஓரத்தில் எப்போதும் ஒரு நினைவு: மதன்பாபு முதலாம் ஆண்டு நினைவு நாளில் மகள் பதிவு
தமிழ் திரையுலகில் தனது சிரிப்பு மூலம் பிரபலமானவர்ர் நடிகர் மதன் பாபு. ஆரம்பகாலங்களில் நீங்கள் கேட்டவை, இதயகோயில், தேவர்மகன் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் பிரண்ட்ஸ், ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட பல படங்களில் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்தார். கிட்டத்தட்ட 200 பட்ங்கள் வரை நடித்துள்ள அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மரணமடைந்தார்.

மதன்பாபு இறந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது மகள் ஜனனி தனது வேதனையை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியபோது, துயரம் ஒருவரின் உலகையே மாற்றிவிடுகிறது. எல்லாவற்ர்றையும் பார்க்கும் பார்வையையே அது தலைகீழாக மாற்றுகிறது.. வெளியில் பார்க்கும் அனைவருக்கும் எதுவும் மாறாதது போலத் தோன்றலாம். ஆனால் அந்த வலியை சுமப்பவர் மட்டும் வேறொரு உலகில் வாழ்வது போல அமைதியாக அந்த இழப்பை உணர்ந்துகொண்டிருக்கிறார். மனதில் ஓரத்தில் எப்போதும் ஒரு நினைவு... இனி எதுவும் பழையபடி இருக்காது என்று, அதில் மிகக் கடினமான உண்மை என்னவென்றால் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீண்ட பகல்களும், அதைவிட நீண்ட இரவுகளும் கடந்த ஓராண்டு என்று தனது தந்தை மறைந்து ஓராண்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
