Thalaivar173: கமல் கஷ்டத்திலா இருக்கிறார்?!.. மொத்த வசூல பாருங்க!.. புள்ளி விபரம் சொல்லும் ஃபேன்ஸ்!..
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்கிற செய்தி வெளியானதுமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி கோலிவுட்டுக்கும் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுந்தர்.சி இயக்கவுள்ள இந்த படம் 2026 மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் முடிவடையும் என தெரிகிறது. ஏனெனில் 2027 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
கடந்த பல வருடங்களாகவே அதிக வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படத்தில் நடித்து வந்த ரஜினி தற்போது அது போதும் என முடிவெடுத்ததின் விளைவுதான் சுந்தர்.சி போன்ற இயக்குனரின் கதையில் நடிக்க முடிவெடுத்தது என்கிறார்கள். ஒருபக்கம் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு படம் நடித்துக் கொடுக்க ரஜினி முடிவெடுத்ததன் பின்னணியில் பல காரணங்களும் சொல்லப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரித்து நடித்த தக் லைப் அவருக்கு 180 கோடி வரை நஷ்டம். விகரம் மற்றும் அமரன் ஆகிய படங்களில் சம்பாதித்ததையெல்லாம் அவர் தக் லை படத்தில் விட்டு விட்டார். எனவே அவர் தனது நிலையை ரஜினியிடம் சொல்ல அதை புரிந்து கொண்டு ரஜினி அவருக்கு இரண்டு படங்கள் நடித்து கொடுக்கிறார் என சிலர் பேசுகிறார்கள்.
ஏனெனில், ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவுள்ள படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. ஆனால், இதில் வேறு சில மாதிரியான கருத்தும் நிலவுகிறது. கமல் கஷ்டத்திலெல்லாம் இல்லை. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஏதோ பாதாளத்தில் விழுந்து விட்டது போல பேசுகிறார்கள். இது முழுக்க முழுக்க வதந்தி.
‘ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் படம் 450 கோடி வசூல், அமரன் 330 கோடி, தக் லைப் 100 கோடி என மொத்தம் 860 கோடி வசூல். அதேபோல ரஜினியின் கூலி 500 கோடி வசூல், வேட்டையன் 250 கோடி, லால் சலாம் 30 கோடி என மொத்தம் 780 கோடி வசூல். ஆக மொத்தம் இரண்டு பேருமே பாக்ஸ் ஆபீஸ் வித்தகர்கள்தான். நண்பர் என்கிற முறையில் ரஜினி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அவ்வளவுதான்’ என்கிறார்கள் புள்ளி விபரம் புலிகள்.
