×

தடையை மீறி சுற்றுலா சென்ற நடிகர்கள் –சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 காவலர்கள்!

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்ததாக விமல் மற்றும் சூரி மீது கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்ததாக விமல் மற்றும் சூரி மீது கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பேரிடர் காரணமாக இந்தியா முழுவதும் 3 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்துறை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் பேரிஜாம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதிகப்படுள்ளது. இந்நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் அங்கு சென்று  பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இது மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் தலா ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் உதவி செய்ததாக 3 வனத்துறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News