பிரேக்கப் ஆனதா சுனைனா காதல்?

காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சுனைனா. தொடர்ந்து  மாசிலாமணி, வம்சம்,  நீர்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
 
sunaina

காதலில் விழுந்தேன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் சுனைனா. தொடர்ந்து  மாசிலாமணி, வம்சம்,  நீர்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  இறுதியாக வன்மம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  ஆனால் அந்த படம் இப்ப்போது வரை வெளியாகவில்லை.

சுனைனா ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிரபல யுடியூபர் காலித் அல் அமெரி என்பவரை காதலித்து வந்தார். அதுமட்டுமின்றி கடந்த வருடம் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.  இது தொடர்பான புகைப்படங்களை இருவருமே தங்களது சமூகவலைதள பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்தனர்.

sunaina

இந்த  நிலையில்  சுனைனா மற்றும் அவரது காதலர் காலித் அல் அமெரி இருவரும் தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூகவலைதள் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் அன் ஃபாலோ செய்துள்ளார்கள். இதனை வைத்து பார்க்கையில் இருவருக்கும் பிரேக்கப் ஆகியுள்ளது என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து இருவரும் எதுவும் கூறவில்லை.

Tags

From Around the web