தலைவரை பார்த்ததும் சுந்தரி பாடல் ஒலிக்கத் தொடங்கிடுச்சி - கயாடு லோகர்

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்த இவர், மலையாளத்தில் வெளியான பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்ப்பில் வெளிவந்த டிராகன் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் இவர். தொடர்ந்து சய் அபயங்கர் இசையில் வந்த பவழமல்லி பாடல் மிகப்ப்ரிய வெற்றி பெற்று அவர் மீதான கவனத்தை அதிகரித்தது. தற்போது சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

தலைவரை பார்த்ததும் சுந்தரி பாடல் ஒலிக்கத் தொடங்கிடுச்சி - கயாடு லோகர்

இந்நிலையில், நடிகை கயாடு லோஹருக்கு மிகவும் எதிர்பாராத ஒரு நிகழ்வு விமானப் பயணத்தின்போது நிகழ்ந்துள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விசயத்தை பகிந்துள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகையான தனக்கு இந்தச் சந்திப்பு ஒரு கனவு நனவான தருணமாக இருந்ததாக கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவில்,

தலைவரை பார்த்ததும் சுந்தரி பாடல் ஒலிக்கத் தொடங்கிடுச்சி - கயாடு லோகர்

நான் இன்னும் கனவு காண்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்!!!

ரஜினிகாந்த் சாரின் மிகப்பெரிய ரசிகையாக இருந்த நான், ஒரு கட்டத்தில் விமானத்தில் அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது உண்மையில் நடந்ததா என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவரைப் பார்த்த அந்த நொடியே, என் மனதில் ‘சுந்தரி’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது. உடனே நான் வேறொரு உலகத்துக்கே சென்றுவிட்டது போல உணர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web