தனுஷ் என் கிளாஸ் மேட்; என்கிட்ட அடி வாங்கிருக்கார் - மனம் திறந்த மந்த்ரா
பிரியம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மந்த்ரா. தொடர்ந்து லவ் டுடே, ரெட்டை ஜடை வயசு, கண்ணன் வருவான் என பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 90களில் இளைஞர்களின் விருப்ப நாயகிகள் பட்டியலில் மந்தராவும் ஒருவர்.
இந்த நிலையில் மந்த்ரா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனுஷ் குறித்த பல் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, தனுஷ் எனக்கு கிளாஸ் மேட். 5வது வரை நாங்கள் ஒன்றாகத்தான் படித்தோம். ஸ்கூலில் நான் குரூப் லீடராக இருந்தேன். என் குருப்பில்தான் தனுஷ் இருந்தார். நான் அவரை திட்டி இருக்கேன். என்கிட்ட அடி கூட வாங்கி இருக்கிறார். எங்கள் ரெண்டு பேருக்கும் ஸ்கூலில் செட்டே ஆகாது. ஆனால் நான் பார்த்த தனுஷ் வேறு நீங்கள் பார்க்கும் தனுஷ் வேறு இன்று ஹீரோவாகி டைரக்டர் ஆவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை என்று கூறியுள்ளார்.
