×

ரஜினி பட நடிகைக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

 
ரஜினி பட நடிகைக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. எனவே, மீண்டும் கொரோனா வைரஸ் பலரையும் தாக்கி வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், பிரபலங்கள், திரைப்பட கலைஞர்கள் என யாரும் தப்பவில்லை. 

சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார் மற்றும் 96 படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷான் ஆகியோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். 

nivetha

இந்நிலையில், பிரபல நடிகை நிவேதா தாமஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். பாபாநாசம் திரைப்படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் படத்த்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்தவர். இவரின் சொந்த ஊர் கேரளா ஆகும். 

தனது டிவிட்டர் பக்கதில் ‘கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.மருத்துவ விதிமுறைகளை கடைபிடித்து வருகிறேன். விரைவில் குணமடைந்து விடுவேன். என் மீது அன்பும், ஆதரவும் காட்டுபவர்களுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்’ என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News