×

சினிமாவுக்கு வருவதற்கு முன் திரிஷா!.. மடிசார் மாமி லுக்கில் செம க்யூட்.....

 
trisha

மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற திரிஷா ‘லேசா லேசா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும் விக்ரமுடன் நடித்த சாமி படத்தின் மூலம் அனைவராலும் அறியப்படும் நாயகியானார். அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் நடித்த கில்லி படம் மிகப்பெரிய ஹிட்டானதால் நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் நீண்ட காலங்கள் நிலைப்பதில்லை. இதற்கு மாறாக நயன்தாராவும், த்ரிஷாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்கள். வயதானாலும் இவர்களுக்கான மார்க்கெட் தற்போது வரை இருந்து கொண்டு தான் உள்ளது. இதில் நயன்தாரா தனக்கென நிலையான மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார்.

trisha

ஆனால் திரிஷா சற்று தடுமாறி வருகிறார் என்றுதான் கூறவேண்டும். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு படங்களும் வெற்றி பெறவில்லை. எனவே நயன்தாரா தேர்வு செய்வது போலவே திரிஷாவும் சோலோ நாயகி படங்களை தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த த்ரிஷா, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்தார் வருகிறார்.

trisha

இந்நிலையில் தற்போது  திரிஷா, நடிக்க வருவதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை திரிஷாவா இது? என கேட்டு வருகிறார்கள். ஏனெனில் மடிசார் மாமி லுக்கில் அவர் செம க்யூட்டாக இருக்கிறார்.

 தற்போது இவர் நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படங்கலும், மலையாளத்தில் ரம்மி என்ற படமும் தயாராகி வருகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News