சட்டசபையில டான்ஸ் ஆடணுமா? அப்போ அவரை தேர்ந்தெடுங்க.. விஜய்யை தாக்கிப் பேசிய ஆர்த்தி!
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தவெக தலைஅவ்ர் விஜயும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவரும் நடிகை ஆர்த்தி நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ஒருத்தர் நேத்து தான் புதுசா கட்சி ஆரம்பிச்சாரு, ஆனால் நாளைக்கே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று பேராசைப்படுகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர், நன்றாக டான்ஸ் ஆடக்கூடியவர். நமக்குச் சட்டசபையில் ஒருத்தர் டான்ஸ் ஆட வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் தாராளமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், அவர் இப்போதுதான் அரசியலில் சைக்கிள் ஓட்டவே ஆரம்பித்துள்ளார். இன்னும் அவர் ஓட்ட வேண்டிய தூரம் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவருக்கு வந்திருப்பது வெறும் அரசியல் ஆசை மட்டுமே என்று பேசினார்
