×

செம ஸ்டைல்.. செம மாடர்ன்.. ஆளே மாறிய அபர்ணதி... லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்...

 

தொலைக்காட்சியில் வெளியான ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர் நடிகை அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் போராடினார். ஆர்யாவை நீ.. வா.. போ என ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அவரிடம் நெருக்கமானார்.

இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தான் அளிக்கும் பேட்டிகளில் ஆர்யாவுக்கு பிடித்த பெண் நான்தான் என தொடர்ந்து அபர்ணநதி கூறி வந்தார். இன்ஸ்டாகிராமில் abarnathi_6ya என்று பெயரை மாற்றினார். ஆனால், முடிவில் ஆர்யாவோ சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அபர்ணதிக்கு அல்வா கொடுத்துவிட்டார்.  அதன்பின் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தில் நடித்தார்.மேலும், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், திடீரென ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து செம மாடர்னாக, ஸ்டைலாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படம் கோவாவில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News