Categories: Cinema News latest news

என்னோட ஃபர்ஸ்ட் kiss…! அதுவும் இந்த வயசுலயா…? உளறி மாட்டிக் கொண்ட கமல் பட நாயகி….

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை அபிராமி. இவர் தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றவர். மேலும் குடும்பபாங்கான முகம், நல்ல உயரம், எதார்த்தமான தோற்றம் இவைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

வானவில். மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். நடித்தது சில படங்கள் என்றாலும் நட்சத்திர அந்தஸ்தை மக்கள் மனதில் பதிய வைத்தார். நடித்த எல்லா படங்களுமே நல்ல அளவில் பேசப்பட்டன.

குறிப்பாக விருமாண்டி படத்தில் இவரின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அதன் பிறகு திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு இவர் தான் டப்பிங் பேசினார் என கமல் கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் கூறியிருந்தார்.

இதையும் படிங்கள் : சிக்குன்னு உடையில் நச்சின்னு இருக்க!…அசத்தல் லுக்கில் அம்மு அபிராமி!…

இதையும் படிங்கள் : மாஸ்டர் படத்தில் பூனை… தளபதி 67 இல்.? மலையாளத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.!

இந்த நிலையில் உங்களோட ஃபர்ஸ்ட் கிஸ் யாருனு கேட்டதற்குகொஞ்சம் கூட யோசிக்காமல் என் அம்மாதான் என கூற கேட்ட ஆங்கர் ஷாக் ஆகிவிட்டார். இதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மேடம் என ஆங்கர் கூறினார். ஆனால் ஃபர்ஸ்ட் கிஸ் நடந்திருக்கு. அதுவும் 15, 16 வயதில் பண்ணியிருக்கேன். இதை என் பெற்றோர்கள் பார்த்தால் ஷாக் ஆகிடுவாங்க. ஆனால் யாருனு சொல்ல மாட்டேனு கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini