நடிச்சிடலாம் ஆனா அது ரொம்ப கஷ்டம்... அபிராமி வெளியிட்ட புகைப்படம்...
Sat, 20 Feb 2021

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் அபிராமி. அப்படம் வெளியாகும் முன்பே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அங்கு சண்டை, அழுகை என பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வ்ருகிறார்.
இந்நிலையில், தான் நடித்த படம் ஒன்று டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஒருவழியாக டப்பிங்கை முடித்து விட்டேன். நடித்து விடலாம். ஆனால், அதே போல் டப்பிங் பேசுவது ரொம்ப கஷ்டம்டா சாமி. யாரோ நடித்ததற்கு உயிர் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களை வணங்குகிறேன்’ என உருகியுள்ளார்.