பார்த்த உடனே மூஞ்சிய கழுவ சொன்ன பாலா - சேது பட ஹீரோயின் பளீச்!

 
sethu movie

 

தமிழ் சினிமாவில் விசித்திர படைப்பாளி ஆன இயக்குனர் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சேது. இந்த திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபிதா குஜாலம்பாள் நடித்திருந்தார் .

அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் இன்றளவும் நின்று பேசும் படியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் பாலாவுடன் பணியாற்றியது குறித்து ஹீரோயின் அபிதா பேசும்போது... நான் முதன் முதலில் அந்த படத்தோட சூட்டிங் போனவுடனே என்ன பாலா சார் பார்த்தவுடனே ஒரு சோப்பு கையில கொடுத்து போய் முகத்தை நல்லா கழுவிட்டு வா என்று அனுப்பினார் .

sethu

ஏன் சார்? அப்படின்னு கேட்டதுக்கு என்னோட படத்துல இவ்வளவு மேக்கப் எல்லாம் இருக்கவே கூடாது  நீங்க எப்படி இருக்கீங்களோ நேச்சுரலா அப்படியே எப்படி இருக்கனும் என்று சொல்லி படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். அதுமட்டுமில்லாமல் என்னோட இன்ட்ரொடக்சன் பாடலுக்கு எனக்கு நடனமே ஆட தெரியல அப்போ பயங்கரமா என்னை திட்டிட்டாரு நான் ரொம்ப அழுதுட்டேன் என்று நடிகை அபிதா குஜாலம்மாள் தெரிவித்து இருக்கிறார்.

sethu abi

இப்படித்தான் இயக்குனர் பாலு மகேந்திராவும் நடிகைகளின் உண்மை முகத்தையே வைத்தே படத்தை எடுப்பார். அதனால் தான் அவரது திரைப்படங்கள் இன்றளவும் பேசக்கூடியதாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அபிதாவை நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த விருது நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் சேது  படத்தில் பார்த்த அதே இன்ஸென்ஸ் அப்படியே இருக்கிறது என கூறி வருகிறார்கள். 

Tags

From Around the web