16 வயசிலிருந்து பிரபுவை காதலிக்கிறேன் - மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா!
தமிழ் சினிமாவில் தைரியமான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா. மேலும் இவர் வில்லி கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துபவராகவும் தென்பட்டார்.
சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அத்துடன் அழகான அம்மாவாக நடித்து மனம் கவர்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டார். இப்படி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக தனது பங்கு செய்து கொடுப்பவர் நடிகை ஐஸ்வர்யா .

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா தன்னுடைய பப்பி லவ் குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது நான் 16 வயதிலிருந்து நடிகர் பிரபுவை காதலிக்கிறேன் என மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இது அவரது மனைவி புனிதாவிற்கும் தெரியும். பிரபு சார் வீட்டில் எல்லோருக்குமே இந்த விஷயம் தெரியும். எங்க அம்மா எப்படி சுவாஜி தாத்தாக்கு மிகப்பெரிய ரசிகையோ அதேபோன்று என் தலைமுறையில் நான் பிரபுவின் ரசிகை என நடிகை ஐஸ்வர்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
