திரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கிகொள்வேன் -ஓபனாக சொன்ன அம்பிகா

 

தமிழக முதல்வர் விஜய் - திரிஷா நட்பு குறித்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் மனைவின் சங்கீதா விவாகரத்து விவகாரத்தில் தனது கணவர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என்று கூறியிருந்தார். அன்றிலிருந்தே விஜய் திரிஷா நட்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இது குறித்து இருவருமே எதுவும் கூறவில்லை.

நடிகை திரிஷா சமீபத்தில் படப்பிடிபிற்காக லண்டன் சென்றார். அபோது விஜயின் லண்டன் பயணம் குறித்த தகவல்களும் வந்தன. இதனை தொடர்புபடுத்தி பலரும் சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்தனர். இதனை கண்டித்து பிரபல மூத்த நடிகை அம்ப்பிகா கருத்து தெரிவித்திருந்தார். அதில் திரிஷா லண்டனில் இருந்தா என்ன? சீனாவில் இருந்தா என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அது நமக்கு பிரச்சனை இல்லை என்று கூறியிருந்தார். அம்பிகாவின் இந்த கருத்துக்கு பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சேகுவேரா கடுமையாக பேசியிருந்தார். அம்பிகா திருஷாவுக்காக எதற்காக பேசுகிறார்? அந்த காலத்து திரிஷா தான் அம்பிகா, அதனால் தான் அவர் சப்போர்ட் செய்கிறார். அவருக்கு எம்ஜிஆர் 25 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார் அதைப்பற்றி அம்பிகா பேசுவாரா? என்று கடுமையாக பேசியிருந்தார்.

திரிஷா இடத்தில் நான் இருந்தால் ஒதுங்கிகொள்வேன் -ஓபனாக சொன்ன அம்பிகா

இந்த நிலையில் அம்பிகா பிரபல யூடியூப்ப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இப்போ எனக்கு இரண்டு விஷயம் தெரிய வேண்டும். முதலில் நான் அந்த காலத்து திரிஷா என்றால், அந்த காலத்து விஜய் யார்? என்பது எனக்கு தெரிய வேண்டும். அதை சேகுவேரே சொல்ல வேண்டும். மற்றொரு கேள்வி எனக்கு 25 ஏக்கர் எம்ஜிஆர் கொடுக்கும்போது இவர்தான் வில்லேஜ் ஆபிஸராக இருந்தாரா? அந்த டாக்குமெண்ட் உங்களிடம் தானே இருக்கு? அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்க, அதை விற்று விட்டு உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் தரேன் என்று கூறினார்.

மேலும் திரிஷா அவருடைய நண்பருடன் வெளியே செல்கிறார். ஒருவேளை இருவருக்கும் நட்பு இருக்கிறது, அதை நாங்கள் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் வெளியே காட்டுவோம் என்று இருவரும் நினைக்கலாம். ஆனால் விஜய் இப்ப்போது ஒரு பதவியில் உள்ளார். அவருக்கு நம்ம்முடைய உற்ரவால் அஒரு அவப்பெயர் வந்துகொண்டிருக்கிறது என்றால் நான் திரிஷா இடத்தில் இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் தர்ம சங்கடமாகும்ம் வகையில் நடந்துகொள்ள மாட்டேன். ஒதுங்கி கொள்வேன் என்று அம்பிகா கூறியுள்ளார்.

அம்பிகாவின் இந்த பேட்டியை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பிகாவிற்கு நன்றி சொல்லி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

From Around the web