×

கல்யாணம் முடிஞ்சுட்டா கரியர் ஓவரா... கொதிக்கும் ஆனந்தி 

திருமணத்துக்குப் பின்னரும் நடிகைகளால் நடிப்பில் ஜொலிக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் நடிகை ஆனந்தி.
 

கயல் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஆனந்தி, `கயல்’ ஆனந்தியாகவே மாறிப்போனார். அதன்பின்னர், பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு பெயர் வாங்க முடியவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான `கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படம் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. 


படிப்புக்காகப் போராடும் கிராமத்து இளம் பெண் கதாபாத்திரத்தில் சமூக அவலங்கள் குறித்து இயக்குனர் கிளாஸ் எடுத்திருந்தார். படம் குறித்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்திருக்கும் நிலையில், ஆனந்தி சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். 


சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிப்பது குறித்து பேசிய ஆனந்தி, ``திருமணம் முடிந்துவிட்டால், ஒரு நடிகையின் கரியர் அத்தோடு முடிந்துவிட்டதாகச் சொல்வது எந்த விதத்தில் நியாயம். திருமணத்துக்குப் பின்னரும் நடிக்க முடியும். ஒரு நடிகை 30 வயதுக்குள் நடித்து முடித்து விட வேண்டும் என்று கூறுவது தவறு. எனக்கு எனது குடும்பத்தினர் நிறைய ஹெல்ப் பண்றாங்க. அதனாலதான் திருமணத்துக்குப் பிறகும் என்னால நடிக்க முடியுது. திருமணம் முடிந்துவிட்டால் நடிகைகளுக்கு வாய்ப்பு வராது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை’’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News