செல்லக்குடியுடன் பொங்கல் கொண்டாடிய நடிகை ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது செல்ல நாய்குட்டியுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். ஆண்ட்ரியா விஜய் நடிப்பில் நேற்று வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பாராட்டு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.