×

கொரோனா தனிமையில் இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்ட அதிரடி டிவீட்!!!

14 நாட்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த ஆண்ட்ரியா தற்போது கொரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளார்.

 
கொரோனா தனிமையில் இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்ட அதிரடி டிவீட்!!!

14 நாட்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த ஆண்ட்ரியா தற்போது கொரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளார்.

இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கொரொனா தொற்றியிலிருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், கொரோனாபரிசோதனையில் பாசிட்டிவ் வந்தாலும் நீங்கள் பாசிட்டிவாக இருங்கள். பயம் மற்றும் பதற்றம் உடலை மேலும் மோசமாக்கிவிடும். கொரோனா வைரஸ மூக்கு, தொண்டை, இறுதியாக நுரையீரலை தாக்குகிறது.இந்த சுவாசப்பாதையை தொற்றில் இருந்து காக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள். புதினா, கற்பூர எண்ணெய் ஆகியவற்றைப்போட்டு ஆவி பிடியுங்கள்.

இந்த நேரத்தில்,என்ன சாப்பிடுகிறோம், என்ன குடிக்கிறோம் என்பதுதான் மிக மிக முக்கியம். மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால், சூப் ஆகியவற்றை அருந்தலாம். சளி பிடிக்க கூடிய உணவுகளை தவிர்த்து விடுங்கள். அடிக்கடி தண்ணீர், ஜூஸ் எதையாவது குடித்துக்கொண்டே இருங்கள் அது உடலுக்கு தெம்பைத் தரும்.

பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ நின்று தினமும் கொஞ்ச நேரம் வெளிகாற்றை சுவாசியுங்கள். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி,பி, சிங்க் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்,அஸ்வகந்தா, துளசி என மூலிகைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்

கொரோனா குறித்து வரும் எதிர்மறையான செய்திகளை தவிர்த்துவிடுங்கள், புத்தம் படியுங்கள், பாடல்களை கேளுங்கள், நண்பகள் மற்றும் உறவினர்களோடு பேசுகள் இது மன அழுத்தத்தைக் குறைக்கும், மேலும், நோய் அறிகுறிகள் தீவிரமானாலோ, ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலோ மருத்துவமனை செல்லுங்கள் காலதாமதம் செய்யாதீர்கள் என நடிகை ஆண்ட்ரியா ட்விட்டரில் எழுதியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News