அழகாலே கொல்லுறியே ஆண்ட்ரியா!... வாலிப பசங்க ஐயோ பாவம்!. வைரல் பிக்ஸ்!...

பாடகி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு முறையாக அதை கற்றுக்கொண்டார். வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். சினிமாவில் இவர் பாடியது எல்லாமே அது போன்ற பாடல்கள்தான்.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் நடிகையாக மாறினர். பல படங்களில் நடித்திருந்தாலும் வட சென்னை, துப்பறிவாளன், தரமணி, அரண்மனை மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். சினிமாவில் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட் அடித்திருக்கிறது. பெரும்பாலும் அஸ்கி குரலில் பாடி வாலிபர்களை சூடேத்துவார் ஆண்ட்ரியா. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை கூட பாடியது இவர்தான்.
சினிமாவில் பாடுவது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் நடக்கும் இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகிறார். மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சில சமயம் கவர்ச்சி தூக்கலாகவும் இருக்கும். இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.Mugas
Mugas  

Related Articles

Next Story