Connect with us
anu

Cinema News

‘கொஞ்சும் நிலவு, கொஞ்சும் நெருப்பு’ பாடலில் செம ஆட்டம் போட்ட அனு அகர்வால் – இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

மணிரத்தினம் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க மணிரத்தினம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்தார்.

மேலும் இந்த படத்தில் அனு அகர்வால் ,எஸ் பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். படத்தின் கதைப்படி திருட்டு தொழில்களில் ஈடுபடும் நண்பர்கள் இருவர் அவர்களுக்கு தோழியாக ஒரு பெண்ணும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள். இப்படி பல சமயங்களில் இவர்கள் திருடிக் கொண்டே இருக்க பலமுறை போலீசாரிடம் இருந்து தப்பி செல்கின்றனர்.

anu1

anu1

இப்படி தப்பிச்செல்லும் போது நடனமாடும் பெண்ணொருத்தியை அவர்கள் சந்திக்க அந்தப் பெண்ணும் சர்வதேச அளவிலான திருட்டு கும்பலை சேர்ந்தவள் என தெரிகிறது. அந்தப் பெண்ணின் துணை கொண்டு ஆயிரம் கோடி மதிப்பில் ஆன பணத்தை அனைவரும் தேடி செல்கின்றனர். இவற்றை தெரிந்து கொள்ளும் அந்த சர்வதேச திருட்டு கும்பலின் தலைவன் இவர்களின் திட்டத்தை அறிந்து இவர்களை தேடி அலைகிறான்.

அதன் பின்னர் நண்பர்கள் இருவரும் அந்த பணத்தை எடுத்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும். இந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. முக்கியமாக அந்த படத்தில் கொஞ்சும் நிலவு கொஞ்சும் நெருப்பு என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. பாடலில் நடனமாடியவர் நடிகை அனு அகர்வால் .அவர்தான் இந்த படத்தில் சர்வதேச திருட்டு கும்பலைச் சேர்ந்த நடனமாடும் பெண்ணாக நடித்திருப்பார்.

anu2

anu2

நடிகை அனுகர்வால் பற்றிய செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .டெல்லியைச் சேர்ந்த அனு அகர்வால் தமிழில் இந்தப் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். யோகாவில் நாட்டம் கொண்ட அனு அகர்வால் ஒரு பள்ளியில் யோகாவில் சேர்ந்தாராம். அதன் பின்னர் துறவியாகவும் மாறி இருக்கிறார் .மேலும் அறக்கட்டளை ஒன்றை நடத்தியும் வருகிறாராம். மேலும் இவருக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு அதன் மூலம் 29 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டும் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : அந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடித்த சில்க் ஸ்மிதா.. காரணம் அதுதானாம்!

Continue Reading

More in Cinema News

To Top