Categories: Cinema News latest news

சில்க் இறப்பதற்கு முதல் நாள் இரவு நடந்த சம்பவம்!.. நடந்ததை நினைத்து இப்ப வரைக்கும் மனம் குமுறும் நடிகை..

தமிழ் சினிமாவில் 80,90களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரை பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் வந்தாலும் சில்கை பற்றி பேட்டி கொடுக்கும் அனைவரும் சில்கை மாதிரி ஒரு நடிகையை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தான் சொல்லி வேதனைப்படுகின்றனர்.

பழகியவர்களுக்கு தான் தெரியும் சில்க் எப்படி பட்ட பெண், எந்த மாதிரியான கேரக்டர் என்று. குழந்தைத்தனமான
பேச்சு, பழகுவதற்கு இனிமையானவர் என திரையுலகினருக்கும் மிகவும் விருப்பப்பட்ட நடிகையாகவே வலம் வந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா.

silk smitha

ஆனால் இவரை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் ஏதோ ஒரு மன விரக்தியில் இருந்ததனால் தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஏன் அப்படி செய்தார் என்று இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு மர்மமாகவே இருக்கின்றது சில்கின் தற்கொலை விவகாரம்.

ஆனால் சில்க் இறப்பதற்கு முதல் நாள் இரவு நடிகை அனுராதாவிற்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார். அனுராதாவும் அந்த காலத்தில் கவர்ச்சி நடனத்தில் பேர் போனவர். இவருக்கு தான் தொலைபேசியில் அழைத்து கொஞ்சம் வர முடியுமா என்று சில்க் கேட்டாராம்.

silk smitha

ஆனால் அனுராதாவோ ‘இரவு 9.30 மணி ஆகிவிட்டது, சதிஷும் இப்பொழுது வந்து விடுவார், ஏதாவது எமர்ஜின்சினா சொல்லு வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சில்க் ‘இல்ல, சும்மா தான், பேசலானு நினைச்சேன்’ என்று கூறினாராம். இருந்தாலும் அனுராதா ‘அவசரம் என்றால் சொல்லு உடனே வருகிறேன்’ என்று சொல்ல,

அதற்கு சில்க் ‘அப்போ நாளைக்கு காலையில சீக்கிரம் வந்துடுவீயா?’ என்று கேட்டிருக்கிறார். இதற்கு அனுராதா ‘அபி காலையில 8.30 க்கு பள்ளிக்கு அனுப்பிவிட்டு அப்படியே உன்னை பாக்க வந்துரேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார். மறு நாள் காலையில் அனுராதாவின் கணவரான சதீஷ் டிவியை பார்த்து ஷாக் ஆகியிருக்கிறார்.

silk anuradha

அதில் ஃபிளாஷ் நியூஸில் சில்க் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருந்ததாம். இதை அனுராதாவிடம் சொல்ல அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத துக்கம். இதை நினைத்து இப்ப வரைக்கும் வேதனைப்படுகிறார் அனுராதா. ஒரு வேளை அவ கூப்பிட்ட அன்னிக்கே போயிருந்தா எதாவது சொல்லியிருப்பாளோ என்று வேதனைப்படுகிறார்.

Published by
Rohini