kamal
நடிகை அனுராதா கமலுடன் நடித்த அனுபவம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவள் ஒரு தொடர்கதையில் இருந்து கமல் என்னைப் பார்த்துக்கிட்டு இருக்காரு. பாரதிராஜா சார் படத்துல நடிக்கும்போது ஒரு சாங். என் தோள் மேல அவர் கையை வைக்கும்போது நான் தலையைத் தூக்கணும். அவரும் நானும் கையை ஒரே நேரத்துல தூக்கணும்.
நான் தலையைத் தூக்கும்போது அவரும் தலையைத் தூக்கணும். அப்படித் தான் நினைச்சேன். ஆனா நான் தலையைத் தூக்கும்போது அவர் என் தலையிலயே ஒரு போடு போட்டாரு. ‘மூணுமே ஒண்ணா வரணும். என் கை, உன் தலை, என் தலைன்னு சொன்னாரு. நீ ஏன் முன்னாடியே ஸ்டெப் போடுற’ன்னாரு.
ஒரு தடவை பெரிய ஊஞ்சல் மாதிரி ஒரு செட்ல அடியில கமல் சார் ஒரு பலகையில படுத்துருக்காரு. அவருக்கு மேல ஒரு பலகை. அதுல நான் நிக்கிறேன். கயிறை சுத்தி விடுறாங்க. அது வேகமா சுத்தும்போது அறுந்து விழுந்துடுது. கீழே விழவும் கமல் சாருக்கு முதுகுல பயங்கர அடி. அப்படியே அவர் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டாரு.
Antha oru nimidam
நான் என்ன நடந்ததுன்னே தெரியாம இருக்கேன். செட்ல உள்ள எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி. அப்புறம் அவரு ‘ஒண்ணும் இல்ல’ன்னு ஒரு பெல்ட் மாதிரி கட்டிக்கிட்டு எழுந்ததுட்டாரு. அப்புறம் தான் எல்லாருமே நிம்மதியானாங்க. அந்த மாதிரி எல்லாம் நடந்துருக்கு.
கமல் சார் ஒரு டீச்சர். என்னென்ன செய்யணும்னு நல்லா சொல்லித் தருவாரு. இப்படி பண்ணு. அப்படி பண்ணுவாரு. அந்த ஒரு நிமிடம் படத்துல கூட குடுமி வச்சிருப்பாரு. அதைத் தொட்டு அழகா ஆடச் சொல்லித் தந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ல் கமல், ரேவதி, ராதா, ஜனகராஜ் நடிப்பில் ஒரு கைதியின் டைரி வெளியானது. இந்தப் படத்தில் தான் அனுராதாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையில் ஏபிசி நீ வாசி, இது ரோசா பூவு, நான் தான் சூரன், பொண்மானே கோபம் ஏனோ ஆகிய பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…