×

முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்தது அந்த நடிகையாம்.. வேற லெவலா இருந்திருக்கும்!...

 
sai pallalvi

மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இப்படத்தில் தமிழ் பெண்ணாக நடிகை சாய் பல்லவி அறிமுகமானார். அதோடு, சிரிப்பு, முகபாவனை என அசத்தி தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்டார். ஆட்டோகிராப் திரைப்படம் போல் இப்படமும் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு பின் சாய் பல்லவி பிஸியான நடிகை ஆகிவிட்டார்.

asin

இந்நிலையில், சமீபத்தில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் ‘முதலில் பிரேமம் படம் கதையை எழுதிய போது கொச்சினில் இருந்து வரும் ஆசிரியர் என்றுதான் எழுதியிருந்தேன். அந்த வேடத்தில் அசின் பொருத்தமாக இருக்கும் எனக்கருதி அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். நவின் பாலியும் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. எனவே, தமிழகத்திலிருந்து வரும் ஆசிரியை என மாற்றினேன். எனவே, சாய் பல்லவி நடித்தார். நான் படித்தது சென்னையில்தான் எனவே தமிழ் எனக்கு நெருக்கமானது’ என தெரிவித்துள்ளார்.

மலர் டீச்சராக அசின் நடித்தால் எப்படியிருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்...
 

From around the web

Trending Videos

Tamilnadu News