Connect with us
Baby Shamili

Cinema News

மூன்றே வயதில் தேசிய விருது பெற்ற ஷாமிலி… சினிமாவை விட அந்த விஷயத்தில்தான் ஆர்வமாம்..!

தமிழ்த்திரை உலகில் அக்காவும், தங்கையும் குழந்தை நட்சத்திரத்தில் ஜொலித்தார்கள் என்றால் அது பேபிஷாலினியும், பேபிஷாமிலியும் தான். இவர்கள் வளர்ந்ததும் வெவ்வேறு துருவங்களில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமா…

நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே தமிழ்சினிமாவில் நடித்து பிரபலமானவர். சிவாஜி, அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரது தங்கை ஷாமிலி. இவரும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தனது 2வது வயதிலேயே நடிக்க வந்து விட்டார். இவரது முதல் படம் கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜ நடை.

Shamili Paintings

Shamili Paintings

இருந்தாலும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த படம் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி தான். படத்தின் கதை முழுவதும் இவரைச் சுற்றிச் சுற்றியே வரும். இந்தப்படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக தேசியவிருதே கொடுக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் தமிழக அரசின் விருதும் இவருக்குக் கிடைத்தது.

தொடர்ந்து தைப்பூசம், செந்தூர தேவி, அன்பு சங்கிலி, தேவர் வீட்டு பொண்ணு, வாசலிலே ஒரு வெண்ணிலா ஆகிய படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் அஜீத், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யாராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கமலா என்ற கேரக்டரிலும் ஷாமிலி நடித்தார். ஆனாலும் அந்த நேரத்தில் இவரைப் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

Baby Shamili in Veera Sivaji

Baby Shamili in Veera Sivaji

மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். தமிழில் விக்ரம்பிரபு நடித்த வீரசிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் இவருக்கு நடிப்பில் ஆசையே இல்லையாம். இவரது ஆர்வம் எல்லாம் பெயிண்டிங்கில் தான் இருந்தது. இவரது ஓவியங்கள் துபாய் உள்ளிட்ட நாடுகளில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதாம்.

பெயிண்டிங்கில் சாதனை படைக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். அதனால் அவரது பெற்றோரும் அவர் விருப்பப்படியே விட்டுவிட்டார்களாம். திரையில் அக்கா போல ஜொலிக்காவிட்டாலும் ஓவியத்தில் மிளிர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top