சூர்யா ரீல் தங்கச்சியா இப்படி!.. மலையில் இருந்து அடித்த டைவை பாருங்க!..
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பவானிஸ்ரீ தற்போது பகிர்ந்துள்ள புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கையான பவானிஸ்ரீ சமீபத்தில் தனது தோழிகளுடன் சென்ற சுற்றுலா அனுபவத்தைப் வீடியோவுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கடலுக்குள் இறங்குவதற்கே பயந்த பெண்ணான நான், தற்போது பல சாகச அனுபவங்களில் ஆர்வத்துடன் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும், இந்தப் பயணத்தில் பல புதிய அனுபவங்கள் கிடைத்ததாகவும், உற்சாகம், பயம் எனப் பல உணர்வுகளைக் கடந்து வந்ததாகவும், தனது தோழிகளுடன் இணைந்து இந்த நினைவுகளை உருவாக்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்தப் பயணம் தன்னை முன்பைவிட தைரியமானவராகவும் மகிழ்ச்சியானவராகவும் மாற்றியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பவானி ஸ்ரீ விடுதலை, காளிதாஸ் 2, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும்,இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் மணிப்பூர் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது தனது சுற்றுலாப் பயணப் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
