×

திருமணத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்த நடிகை... இப்படியொரு காரணமா?

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது. குடும்ப நிகழ்ச்சிகள் தவிர்த்து சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் நிபந்தனை விதித்தார்களாம்.

 
0ec2eaff-4cf0-42ab-bc3f-fe6c80442ba9

மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும், அரசியல் குடும்பத்தை சேர்ந்த பவ்யா பிஷ்னோய்க்குமான திருமணம் நின்றுவிட்டது. இந்நிலையில் மெஹ்ரீன் போட்ட ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும், ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. 

அடேங்கப்பா, நிச்சயதார்த்தமே திருவிழா மாதிரி நடக்கிறது என்றால் திருமணத்தை பற்றி சொல்லவா வேண்டும் என்று ரசிகர்கள் வியந்தார்கள். இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. திருமணத்தை நிறுத்தியது குறித்து மெஹ்ரீனும், பவ்யாவும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டனர். 

மெஹ்ரீன் இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியதாவது, திருமணத்தை நிறுத்துவது என்று பவ்யா பிஷ்னோயும், நானும் முடிவு செய்திருக்கிறோம். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இனி எனக்கும், பவ்யா பிஷ்னோய்க்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கக் கூடாது. குடும்ப நிகழ்ச்சிகள் தவிர்த்து சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்று மாப்பிள்ளை வீட்டார் நிபந்தனை விதித்தார்களாம். அழகு பொம்மை மாதிரியான மருமகளாக மட்டும் இருக்க என்னால் முடியாது, அதற்கு வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டார் மெஹ்ரீன் என தகவல் வெளியாகியுள்ளது.

என்னை காப்பாற்றிக்கொள்ள எனக்கு தெரியும் என்பது போன்று மெஹ்ரீன் போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் திருமணம் குறித்து தான் இப்படி பேசியிருக்கிறார் என்கிறார்கள். சுயத்தை விட்டுக் கொடுத்து வாழ்வது தவறு. நீங்கள் எடுத்த முடிவு தான் சரி மெஹ்ரீன் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மெஹ்ரீன் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கன்னம் எல்லாம் ஒட்டிப் போய் ஒல்லியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News