மனசுல சின்ன புள்ளன்னு நினைப்பா? - நடிகை பூமிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Fri, 2 Apr 2021

சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக அறிமுகமான ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.தற்போது தெலுங்கில் அக்கா, அண்ணி வேடம் என கிடைப்பதில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ்-ஐ கண்ட நெட்டிசன்கள் ‘மனசுக்குள்ள் இன்னும் சின்னப்புள்ளன்னே நினைப்பா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.