அட்ஜெஸ்ட்மென்ட்க்கு வந்தினா பலே ஆபர் - நடிகைக்கு ரேட் பேசிய பிரபலம்!
திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட்:
சினிமா துறையில் நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை நடந்து வருகிறது. ஒரு சில நடிகைகள் அதை வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள்.
ஆனால், சிலரோ பட வாய்ப்புக்காக அதை பெரிதாக பொருட்படுத்தாமல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு தொடர்ந்து வாய்ப்புகளை தேடி செல்கிறார்கள்.
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இப்படி பெரும் நட்சத்திர பிரபலங்கள் சிலர் நடிகைகளை வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் க்கு அழைக்கிறார்கள்.
அப்படித்தான் பாலியல் ரீதியாக தொல்லைகளை அனுபவித்த சில நடிகைகள் அதை வெளிப்படையாக வந்து சம்பந்தப்பட்ட நபரின் பெயரோடு தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகத்தையே அதிர வைப்பார்கள்.
பிரபலங்களின் புகார்:
அந்த லிஸ்டில் நடிகை பாவனா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் குறிப்பிட்டு சொல்லலாம். சமீபத்தில் கூட பாடகி ஸ்வாகதா பாலியல் தொல்லை குறித்த செய்திகள் ஒட்டு மொத்த திரைத்துறையை அதிரவைத்தது.
அந்த வகையில் தற்போது தனக்கு 25 லட்சம் ரேட் பேசி பண்ணை வீட்டுக்கு அழைத்ததாக பிரபல நடிகை ஒருவர் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார்.
நடிகை கிரக் சீதா தனக்கு திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி பண்ணை வீட்டிற்கு வர சம்மதித்தால் ரூபாய் 25 லட்சம் வழங்குவதாகவும் சிலர் எனக்கு ஆசை காட்டி தகாத உறவிற்கு அழைத்தார்கள். ஆனால், நான் இதை ஹேண்டில் செய்த விதம்தான் சிறப்பு.
ரூ. 25 லட்சம் ஆபர்
இந்த தரக்குறைவான ஆஃபரை நான் உடனடியாக நிராகரித்துவிட்டேன். என்னை போலவே திறமையை நம்பி வரும் பெண்கள் இத்தகைய நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விடாமல் தன்னுடைய திறமையின் மூலமாக திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும்.
இது போன்ற நபர்கள் தான் இப்ப தேடி வரும் எங்களைப் போன்ற நடிகைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறார்கள் என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
