திருமண புகைப்படத்தை பகிர்ந்த பிரிகிடா.. குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் பிரிகிதா சாகா. ஆகா கல்யாணம்ம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற பாத்திரத்தில் நடித்தார். அது அவருக்கு பெரிய புகழை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து வர்மா, வேலன் இரவின் நிழல் மற்றும் கருடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இரவின் நிழல் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவார் என்று பலரும் நினைத்தனர். ஆனாலும் அவரால் பெரிதாக வெற்றியை பெற முடியவில்லை. தமிழ் மட்டுமின்றி த்லுங்கிலும் இச்ல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் ஆனந்த் ராம் என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரிகிடா- ஆனந்த் ராம் திருமணம் நடைபெற்று முடிந்தது. தனது திருமண புகைப்படங்களை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
