சூடுபிடிக்கும் விஷால் விவகாரம்.. சுசித்ராவுக்கு எதிராக களமிறங்கிய நடிகை

by Rohini |   ( Updated:2025-01-11 01:30:27  )
vishal
X

விஷால்:தற்போது விஷாலின் விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மதகஜராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மிகவும் சோர்வுற்று பேசும்போது கை நடுங்கியபடி பேசிய விஷாலை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். என்னதான் பிரச்சினை அவருக்கு என அனைவருமே கேள்வி எழுப்ப தொடங்கினர். சிலபேர் அவன் இவன் படத்திற்கு பிறகு தான் விஷாலின் நிலைமை இந்த மாதிரி ஆனது என்றெல்லாம் கூறினார்கள்.

சுசித்ரா குற்றச்சாட்டு:இன்னும் சில பேர் வேண்டாத நட்பு, குடிப்பழக்கம், பெண்களுடன் தொடர்பு என்றெல்லாம் பல சர்ச்சைகள் வெளியானது. இந்த நிலையில் பிரபல சர்ச்சை பாடகி சுசித்ரா விஷால் பற்றி பல விஷயங்களை பேசி இருந்தார். அதாவது தன்னுடைய வீட்டிற்கு விஷால் ஒயின் பாட்டிலுடன் போதையில் கதவை தட்டியதாகவும் தன் கணவர் இல்லை என்று சொன்ன பிறகும் வீட்டிற்குள் வரவா என கேட்டதாகவும் சுசித்ரா கூறியிருந்தார்.

பதிலடி கொடுத்த சார்மிளா:இது மேலும் பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில் சுசித்ரா சொன்னதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல நடிகை ஷார்மிளா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது விஷால் உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். சுசித்ரா ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. அவர் கூறும் போது சுசித்ரா அவருடைய கணவர் கார்த்திக் விஷால் அனைவருமே நல்ல நண்பர்கள்.

ஒரு நண்பர் வீட்டுக்கு போவதற்கு முன்பு யாராக இருந்தாலும் போன் செய்துவிட்டு தான் போவோம். அப்படி விஷால் போன்ற பெரிய பிரபலங்கள் போகும்போது போன் செய்யாமல் எப்படி போயிருப்பார்? அதுவும் ஒயின் பாட்டிலோடு எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது சுசித்ராவை தேடி மட்டும் ஏன் விஷால் வரவேண்டும் என்றெல்லாம் ஷார்மிளா சுசித்ராக்கு எதிராக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் விஷால் மிகவும் பிசியான ஒரு நடிகர். ஒரு பக்கம் நடிகராக படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் நடிகர் சங்கத்தில் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். சோசியல் ஆக்டிவிட்டீஸிலும் ஈடுபட்டு வருகிறார். இப்படி ஒரு நல்ல மனிதர் விஷால். அவரைப் பற்றி ஏன் தேவையில்லாத சர்ச்சையை சுசித்ரா கிளப்புகிறார் என தெரியவில்லை என சார்மினார் கூறியிருக்கிறார்.

Next Story